விஷ்ணுவர்தன் தயாரிப்பில், அக்க்ஷராஹாசன் நடிக்கும் ‘ஃபிங்கர்டிப்’

விஷ்ணுவர்தன் தயாரித்து , சிவாகர் இயக்கத்தில், சமூக ஊடகத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இணையத்தொடர் ‘ஃபிங்கர்டிப்’ .இந்த வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 21 முதல் ஜீ 5 -ல் வெளியிடப்படுகிறது.

இந்தியாவின் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி தளமான ZEE5 -ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ்தொடர்களான திரவம், ஆட்டோசங்கர் ஆகியவற்றை தொடர்ந்து, மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் ‘ஃபிங்கர்டிப்’ எனும் திரில்லர் தொடர் வெளியாக இருக்கிறது. 5 எபிசொடுகளைக் கொண்ட இந்த திரில்லர் தொடரில், அக்க்ஷராஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதன்ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் பிரத்யேகமாக ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.

ஒரு ஸ்வைப் , அவர்களது சௌகரியங்களை விட்டு நகர்த்தி, ஒரு தாள முடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்துவிடுகிறது என்பதையும், மிகவும் தெளிவாக எடுத்துகாட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு ஆப்புடன் ஒப்பிடக்கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ஆப்பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராதகோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.

அக்க்ஷராஹாசன் பேசும்போது, பலதரமான அசலான தமிழ்படைப்புகளை உருவாக்கிவரும் ஜீ -5
உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமூகவலைத்தளங்கள் நமது
அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நடிக்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்.’

இத்தொடரின் இயக்குனர் சிவாகர் பேசியபோது , அசலான புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இந்தகாலச் சூழலில், அதன் முன்னோடியாக திகழும் ஜீ 5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பரபரப்பான திரில்லர் தொடரான ‘ஃபிங்கர்டிப்’, உங்களை வெகுவாக ஈர்க்கும், யோசிக்க வைக்கும், அதேசமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்”.

Leave a Response