அத்திவரதர் தரிசனம் நிறைவுபெற்றது

கடந்த 48 நாட்களாக காஞ்சிபுரம் முழுவதும் விழாக்கோலமாக காணப்பட்டது.அதற்கு காரணம் அத்திவரதர். அத்திவரதரின் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பார்க்கமுடியும். அதுவும் ஒரு மண்டலம் [48 நாட்கள் ] மட்டுமே காட்சி அளிப்பார்.இதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்தனர்.அரசியல்வாதிகள் ,அரசு அலுவலர்கள், திரையுலக பிரமுகர்களும் இதில் அடங்குவர்.நேற்றோடு தரிசனம் நிறைவுபெற்றது .சுமார் 1 கோடி மக்கள் வழிபட்டனர் என கூறப்படுகிறது.

அத்திவரதரை பற்றி இந்த 48 நாட்களில் பேசாத மக்களே இல்லை அவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த தருணத்தை மக்கள் பார்த்தது பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.வரமுடியாத மக்களும் அவரை புகைப்படங்களில் கண்டுமகிழ்ந்தனர்.

இன்று மீண்டும் தனது இருப்பிடமான அனந்தசரஸ் குளத்திற்குள் அதிவரதர் செல்கிறார்.இன்று காலை முதல் பூஜைகள் செய்யப்பட்டு சிலை மீது தைலம் மற்றும் திரவியங்கள் பூசப்பட்டு இன்று நள்ளிரவுக்குள் குளத்திற்குள் வைக்கப்படுவார்.இன்னும் 40 ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் பார்க்கமுடியும்,அதாவது 2059 -ஆம் வருடம் தான் மீண்டும் அத்திவரதர் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response