சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்க்ஷன்’

டிரெயிடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் விஷால் நடிக்கும் படம் ‘ஆக்க்ஷன்’ இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.விஷாலுக்கு ஜோடியாக தமன்னாவும் ,மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் . ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

காமடி ,குடும்ப படம் ,திரில்,பேய், ஆக்க்ஷன் படம் , என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி .இது முழுநீள ஆக்க்ஷன் படம். இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்க்ஷன் ,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் .இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் .இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர், மிக பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் அசார்பைசான் ,கேப்படோசியா , பாகு ,இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு , பேங்காக் போன்ற இடங்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது .

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது .

Leave a Response