சிம்பு இயக்கி நடிக்கும் ‘மகா மாநாடு’

சிம்பு என்ற பெயரை சொன்னாலே சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் எது செய்தாலும் மக்களிடம் அது விரைவில் சென்றடையும்.இவர் நடிக்கும் படங்களும் அப்படித்தான்.

நீண்ட காலமாக இழுபறியில் இருந்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கும் என அறிவிப்பு வெளியானது.ஆனால் ஒருசில நாட்களிலேயே இப்படத்தில் சிம்பு நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இதற்கு சிம்புவிடம் இருந்து எந்த பதிலும் வராதநிலையில், தற்போது சிம்பு இயக்கி நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘மகா மாநாடு’ எனவும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்கிறார் என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Response