சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத்தலைவன்’

உதயம் என் எச் 4 திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மணிமாறன் இயக்கும் புதிய படம் சங்கத்தலைவன். இப்படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.உதய் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி வெளியிடுகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளிவரவிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்துள்ள மணிமாறன் சிறந்த படத்தை கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளார்.மேலும் இப்படத்தின் போஸ்டர் வெளியானது ,போஸ்டரில் சமுத்திரக்கனி ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறார்.போஸ்டரில் உள்ள வண்ணங்களும் போராளிகளின் படமும் இருப்பதால் நிச்சயம் இப்படத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு கருத்தை சொல்வது போல் இருப்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response