வானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா

மெட்ராஸ் டாக்கீஸ் & லைகா புரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “வானம் கொட்டட்டும்” இப்படம் மணிரத்னம் கதை வசனத்தில் இயக்குனர் தனா இயக்குகிறார்.இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி ‘படைவீரன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா அம்மாவாக நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் கூறியபோது, என் ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களை பற்றி மணி சாரிடம் சொல்லியிருந்தேன். அவர் அதை ஒரு கதையாக என்னிடமே கதையாக சொல்ல அசந்துவிட்டேன் நான், என்று சொன்ன டைரக்டர் மேலும் தொடர்ந்து . “படைவீரன்” படத்துக்கு பிறகு என்னை அழைத்து, அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை இயக்கு நான் தயாரிக்கிறேன் என்றார்.நடிகர்களையும் அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் துவங்கியது என்கிறார்.

பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் முதல்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் இப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தை 2020-ல் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Response