நேர்கொண்ட பார்வை – விமர்சனம் 3.5/5

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் பிங்க்.இப்படத்தை போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.அஜித்குமார் நடித்துள்ள இப்படத்தை,சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வெற்றி படங்களை தந்த எச்.வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷ்ரத்தா,அபிராமி,ஆண்ட்ரியா ஆகியோர் வீட்டிலிருந்து சில காரணங்களுக்காக வெளியேறி தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்துகொண்டு ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.அப்பொழுது எதிர்பாராத விதமாக சில பெரிய இடத்து ஆண்களின் அறிமுகம் கிடைக்க அதன் மூலம் ஒரு பெரிய பிரச்சனைகளில் மூவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.இதனால் போலீஸ்,கேஸ்,கோர்ட் வரை செல்கிறது.இவர்களுக்கு வக்கீலாக ஆஜராக யாரும் வராத நேரத்தில் அஜித் அஜராகிறார்.

ஒரு காலத்தில பொதுநல வழக்குகளை எடுத்து நடத்தி சில முக்கிய பொறுப்புகளை வகித்துவந்த நேரத்தில் தன் மனைவியை பறிகொடுக்கிறார் ,பிறகு மனைவியின் இந்த நிலைக்கு தாம் தான் காரணம் என நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.இவர்கள் ஒரே அபார்ட்மெண்டில் வசிப்பதால் இவர்களுக்கு அஜித் உதவுகிறார்.இறுதியில் ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா மூவரும் காப்பாற்றப்பட்டார்களா,இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

இப்படத்தில் அஜித் அவர்களின் நடிப்பு,அவர் பேசும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பிளஸ் அஜித்தின் நடிப்பு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிடிக்கும்படி உள்ளது.ஆக்க்ஷன் படம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம். இப்படம் முழுக்க முழுக்க இக்காலத்து பெண்களுக்கான படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வினோத் அவர்கள் மீண்டும் ஒருமுறை சிறந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை உயிரோட்டமாக நீரவ் ஷா படம் பிடித்துள்ளார்.

படத்தின் இன்னொரு பிளஸ் யுவனின் பின்னணி இசை ,மீண்டும் ஒருமுறை வெற்றி கூட்டணி என்பதை யுவன் நிரூபித்துள்ளார். ஷ்ரத்தா, அபிராமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.அதிலும் ஷ்ரத்தாவின் நடிப்பிற்கு ஒரு பெரிய பாராட்டு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் நடிப்பு இயல்பாக இல்லை.அவரது நடிப்பு படத்திற்கு கொஞ்சம் மைனஸ்.படத்தில் சில இடங்களில் கொஞ்சம் வேகம் குறைவுதான் என்றாலும், மொத்தத்தில் அனைவரும் குறிப்பாக பெண்களுக்கான படம் என்றே சொல்லலாம்.

Leave a Response