மீண்டும் மோடி தர்பார்

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் சுமார் 349 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது,இதனால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியானது .

இந்த வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை அடைவோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது என்று நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ,திரை உலக பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

Leave a Response