முதல் டி -20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

இன்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்னிற்கு அட்டமிழந்தது.பொல்லார்ட் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 49 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இந்தியாவின் சைனி 3 விக்கெட்டுகளையும் ,புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும்,கலீல்,ஜடேஜா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.இந்திய அணியில் ரோஹித் 24 ரன்களும் கோலி மற்றும் மனிஷ் பாண்டே தலா 19 ரன்களும் எடுத்தனர். சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Response