தனுஷ் நடிக்கும் பட்டாஸ்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் இணைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

பட்டாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.அவரது ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட இந்த போஸ்டரில் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார்.இப்படம் பற்றி தயாரிப்பாளர் பேசுகையில் இந்த மாபெரும் கூட்டணி நிச்சயமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் நல்ல படத்தை கொடுக்கும் என்றார்.

Leave a Response