ஏ 1 (அக்கியூஸ்ட் நம்பர் 1) – விமர்சனம் 3/5

சந்தானம் நடிப்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில் ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ 1 (அக்கியூஸ்ட் நம்பர் 1).

இப்படத்தில் ஹீரோயின் ரௌடிகளிடம் சிக்கிக்கொள்கிறார் சந்தானம் அவர்களிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றுகிறார் . உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல் வருகிறது , அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார் சந்தானம். லோக்கல் பையனான சந்தானம் அன்று நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதனால் அவர் ஐயர் பையன் தான் என நினைத்து காதலில் விழுந்துவிடுகிறார் அவர். ஆனால் அடுத்த நாளே சந்தானம் யார் என்ற உண்மை தெரியவர காதலை பிரேக் அப் செய்கிறார்.

பின்னர் ஹீரோயினின் அப்பா ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். அதை பார்த்து ஹீரோயினுக்கு மீண்டும் காதல் மலர்கிறது. அதை நம்பி அவர் வீட்டிற்கு குடும்பத்துடன் பெண் கேட்டு செல்கிறார் சந்தானம். ஆனால் அங்கு ஹீரோயின் குடும்பத்தால் அவமானப்படுகிறார். ஒரு சமயத்தில் இந்த பிரச்சனை பற்றி குடித்துவிட்டு உளறுகிறார் சந்தானம். அதை நம்பி அவரது நண்பர்கள் ஒரு விபரீத செயலை செய்துவிடுகின்றனர். அந்த செயலின்மூலம் சந்தானம் சமாளித்து இறுதியில் காதலியை கரம் பிடித்தாரா இல்லையா என்பது தான் இப்படத்தின் கதை சுருக்கம்.

இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், பின்னணி இசை நன்றாக உள்ளது.கதாநாயகி தாரா அலிசா பெரி அவரின் வேலையை சிறப்பாக செய்துள்ளார்.சந்தானம் மற்றும் அவரின் நண்பர்கள் காமெடியில் அசத்தியுள்ளார்.

இயக்குனர் ஜான்சன் அவர்கள் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டுமென நினைத்ததால் படத்தில் லாஜிக் இல்லாத சில காட்சிகள் உள்ளது.மொத்தத்தில் கலகலப்பான முழுநீள காமெடி படம்.

Leave a Response