கடாரம் கொண்டான்- விமர்சனம் 2.75 / 5

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படத்தில் விக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே இரண்டு நபர்களால் துரத்தப்பட்டு அவர் மீது பைக் மோதி அந்த இடத்திலேயே மயக்கமடைகிறார்.அவரை போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கிறது.அங்கு அபிஹாசன் மருத்துவராக பணிபுரிகிறார்.அவரது மனைவி அக்‌ஷரா ஹாசன் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

விக்ரம் உயிருக்கு மருத்துவமனையில் ஆபத்து ஏற்பட அபிஹாசன் அவரை காப்பாற்றுகிறார். பிறகு அவர்மூலமாகவே விக்ரம் கடத்தப்படுகிறார்.வில்லன்கள் யார் என்றே தெரியாமல் படம் நகர்கிறது.படம் முழுக்க அபிஹாசன் பயணிக்கிறார்.

விக்ரம் ஸ்டைலிலும் , நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்,படத்தில் விக்ரம் வரும் நேரம் மற்றும் வசனங்கள் குறைவுதான்.ஆனால் அபிஹாசன் படம் முழுக்க வருகிறார்,சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சில காட்சிகள் நம்பமுடியவில்லை,எதார்த்தத்தை மீறி செல்கிறது.அக்‌ஷரா ஹாசன் நடிப்பும் சிறப்பு.ஒளிப்பதிவாளர் மலேசியாவை அழகாக காண்பித்துள்ளார்.படத்தில் ஜிப்ரான் படம் முழுக்க சிறந்த இசையை கொடுத்திருக்கிறார்.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தின் திரைக்கதை அமையாதது பெரிய மைனஸ்.இயக்குனர் விறுவிறுப்பாக கதையை நகர்த்த முயற்சித்து திரைக்கதையில் கவனம் செலுத்த தவறிவிட்டார்.

Leave a Response