ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” திரைப்படம்

Stone Bench Films மற்றும் Passion Studios தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘பூமிகா’ திரைப்படத்தின் தமிழ் பிரீமியர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் இயக்கியுள்ள “பூமிகா” ஒரு அற்புதமான திகில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இப்படத்தின் அறிமுக தமிழ் திரையிடல் நிகழவுள்ளது குறித்து இயக்குநர் கூறுகையில்.., “இன்றைய காலகட்டத்தில் அதை மக்களை சென்றடையும் தளத்தில் திரைப்படத்தை வெளியிடுவது மிக முக்கியம். விஜய் டிவி பிரீமியர் மூலம் நிச்சயம் எண்ணற்ற மக்களை இப்படம் சென்றடையும். ஒரு படம் அதிக ரசிகர்களை சென்றடைவதே படைப்பாளியின் இறுதி நோக்கமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலான, நட்சத்திர நடிகர்களின் நடிப்பால், அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள, இந்த படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

பூமிகா திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். பாவல் நவகீதன் மற்றும் மிகவும் பல திறமையான புதுமுகங்கள் உட்பட ஒரு பெரிய நட்சத்திரக் குழு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். காட்சிகள் ஒளிப்பதிவாளர் Roberto Zazzara ஒளிப்பதிவு செய்ய, பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் சுதன் சுந்தரம் படம் குறித்து கூறியதாவது…..

Stone Bench Films மற்றும் Passion Studios சார்பில் தயாராகியுள்ள எங்களது “பூமிகா” திரைப்படம் பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திரையிடபடுவது, எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட போது ரசிகர்கள் தந்த வரவேற்பு, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. இப்போது ஸ்டார் விஜய் மூலம் எங்கள் படம், தமிழகத்தின் அனைத்து மக்களையும் சென்றடையும் என நம்புகிறோம். இப்படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்றனர்.

கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் Stone Bench Films மற்றும் Passion Studios சார்பில் தயாரிப்பில் பூமிகா திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை வழங்குகிறார்.

Leave a Response