25 லட்சம் கொரோனா நிவாரண நிதியளித்த நடிகர் அஜித்குமார்

கொரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது . இந்த சூழ்நிலையை சமாளிக்க பொதுமக்களும் தொழிலதிபர்களும் அதிகமான அளவில் நிதி தர வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார் . இவர் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை வங்கிப் பரிமாற்றம் மூலம் வழங்கியுள்ளார் .

Leave a Response