நடிகர் அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல்

ட்விட்டரில் எப்போதுமே கருத்து மோதல் ஏற்படுவது சகஜம். ஆனால் அருவெறுப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜயின் படங்களை வைத்து மீம்ஸ் மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் மாற்றி மாற்றி திட்டிக்கொள்கிறார்கள். தற்போது ட்ரெண்டிங் செய்யப்பட்டு வரும் வார்த்தை “மே -1 அஜித்துக்கு பாடை கட்டு ” , ஜூன்-22 விஜய்க்கு பாவாடை கட்டு . இவ்வாறு ரசிகர்கள் மோதிக்கொள்வது புதிதல்ல. உலகமே கொரோனா வைரஸால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது ரசிகர்கள் இப்படி மாற்றி மாற்றி திட்டிக்கொண்டு தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களை தாங்களே அசிங்கப்படுத்துகிறார்கள்.

கருத்து சுதந்திரம் இருக்கு என்பதால் யார் வேணாலும் யாரையும் அவமானப்படுத்தலாமா என நடுநிலையாளர்கள் வினவுகிறார்கள்.

எப்போதும் தன் மனதில் படும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தும் நடிகை கஸ்தூரி அட்வைஸ் செய்யும் விதமாக “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் .
ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . இவரையும் விட்டுவைக்காத ரசிகர்கள் இவரையும் வசைபாடி வருகிறார்கள்.

Leave a Response