“ஜிப்ஸி” படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமலஹாசன்

”மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி.

ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

திரு.கமலஹாசன் அவர்களுடன் இயக்குநர் கொளதம் வாசுதேவ் மேனன் அவர்களும் திரைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Response