இந்தியா வெற்றி – ரோஹித் சதம்

இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடியது.ஏற்கனவே 2 ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் .

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆம்லா, டி காக் வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் ஒரு கட்டத்தில் 150 ரன்கள் வருமா என எதிர்பார்த்தபோது மோரிஸ் – ரபாடா இணை சிறப்பாக விளையாடியதால் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தவான் – ரோஹித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,தவான் 8 ரன்னிலும் கோலி 18 ரன்னிலும், ராகுல் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பிறகு ரோஹித்-டோனி இணை சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.கடைசியில் டோனி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ரோஹித் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தார்.முடிவில் இந்தியா 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Leave a Response