14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

 

இன்று இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதியது, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி 348 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் பாபர் (63),ஹபீஸ் (83),சர்ப்ராஸ் (55) ரன்கள் எடுத்தனர்.

பிறகு 349 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இங்கிலாந்து அணியில் ரூட் 107 ரன்களும்,பட்லர் 103 ரன்களும் எடுத்தனர்.வகாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

Leave a Response