மீண்டும் சர்ச்சை பேச்சு – இளையராஜா

EVP பிலிம்சிட்டியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் இளையராஜா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார், காவலாளி ஒருவர் மேடைக்கு வந்தார்,அவரிடம் எதற்கு இங்கு வந்தீர்கள் என்றார் காட்டமாக,காவலாளியோ தண்ணீர் கேட்டவருக்கு தண்ணீர் கொடுக்க வந்தேன் என்றார்.அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கோபப்பட்டார் ,காவலாளி அவர் காலைத்தொட்டு மன்னிப்பு கேட்டு சென்றார்.

பிறகு கோபமாக பேசிய இளையராஜா அவர்கள், 500,1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள் 10000 ரூபாய் இருக்கையில் ஏன் அமர்ந்துள்ளீர்கள் ,அதிகமாக விலைக்கு டிக்கெட் வாங்கியவர்கள் என்னை திட்டமாட்டார்களா என்றார்.அவரவர் இருக்கையில் அமர்வது தானே சரியானது என்றார்.மேலும்  அவர்  பேசுகையில் என்னோட பாடல்களில் தானே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

இதை கேட்டவர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர்.இன்னும் சிலரோ பாடல்களை ரசிக்கத்தான் முடியுமே தவிர வாழ்வதற்கு உதவாது என்றனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் சரியான முன்னேற்பாடுகளை செய்யாததால் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தேறியது.

Leave a Response