N G K – விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள படம்   N G K இப்படத்தில் சூர்யா,சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங், உமா பத்மநாபன், பாலசிங், தேவராஜ், நிழல்கள் ரவி,  பொன்வண்ணன், இளவரசு, தலைவாசல் விஜய், வேலா ராமமூர்த்தி, ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா இப்படத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து சில மாதங்கள் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறார்,பிறகு அந்த வேலை பிடிக்காமல் வேலையை உதறி தள்ளிவிட்டு, தனது சொந்த ஊருக்கு சென்று இயற்கை விவசாயம் செய்கிறார் .மேலும்  இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை அப்பகுதி மக்களிடையே பரப்புகிறார். மக்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பெறுகிறார்.இதனால் அப்பகுதியில் இருக்கும் சில வியாபாரிகள்,கந்து வட்டிக்காரரர்கள் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாகிறார்.அவர்கள் தரும் பிரச்சனைகளை சமாளிக்க அப்பகுதி MLA விடம் உதவி கேட்கிறார்.அவரும் உதவி செய்து கைமாறாக தனது கட்சியில் சூர்யாவை சேர சொல்கிறார்.அவரும் சேர்ந்துவிடுகிறார்,பிறகு அரசியலில் நடக்கும் சில சம்பவங்கள் சூர்யாவை வேறுபாதைக்கு அழைத்துசெல்கிறது.சூர்யாவுக்கு மனைவியாக வரும் சாய்பல்லவி நன்றாக நடித்துள்ளார்.

படத்தின் பெரிய வெற்றி யுவனின் இசை தான்,பின்னணி இசையை மிரட்டியுள்ளார் யுவன் என்று தான் சொல்லவேண்டும்.

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவை உயிரோட்டமாக படம் பிடித்துள்ளார்.சண்டை காட்சிகள் நிறைவை தருகிறது.

இயக்குனர் செல்வராகவனிடம் எதிர்பார்த்த விஷயங்கள் இல்லாமல் போனது பெரிய ஏமாற்றம்.சில காட்சிகள் ஏற்கனவே வந்த சிலப்படங்களை நினைவுபடுத்துகிறது, மொத்தத்தில் சுமாரான படமாக அமைந்துள்ளது.

Leave a Response