கங்கை அமரன் இயக்கும் கரகாட்டக்காரன் -இரண்டாம் பாகம்

தமிழில் 1989 -ஆம் வருடம் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்கில் ஒரு வருடத்திற்க்கும் மேல் ஓடி சாதனை படைத்தது, ராமராஜன், கனகா,கவுண்டமணி,செந்தில், காந்திமதி,கோவை சரளா,சந்திரசேகர்,சந்தானபாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இயக்குனராக கங்கை அமரன் அறிமுகமானார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக கங்கை அமரன் முயற்சி செய்து வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களிடம் நடிப்பதற்காக பேசி வருகிறார்,மேலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கதையை தயார் செய்தும்,அதற்கான நடிகர்,நடிகைகளை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த காலத்தில் மாங்குயிலே,பூங்குயிலே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.மேலும் வாழைப்பழம்,சொப்பணசுந்தரி காமெடிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் என்பதை யாராலும்
மறுக்கமுடியாது.இரண்டாம் பாகம் அதற்கு இணையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Response