ஹீரோவானார் சரவணா ஸ்டோர்ஸ் ‘சரவணன்’

நியூ சரவணா ஸ்டோர்ஸ் வழங்கும், அறிமுக நாயகன் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. திரு. ஏ வி எம் சரவணன் குத்துவிளக்கு ஏற்ற, திரு. S.P. முத்துராமன் கிளாப் அடிக்க, ஏ வி எம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு துவங்கியது.

இரட்டை இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி கதை எழுதி இயக்குகிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் லெஜண்ட் சரவணன்அவர்களுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீத்திகா திவாரி நடிக்கிறார்.இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு,விவேக் விஜயகுமார்,நாசர், தம்பி ராமய்யா, காளி வெங்கட்,மயில்சாமி,லதா ,கோவை சரளா தேவி மகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

படத்தின் மற்றுமொரு கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவும், ரூபன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத வைரமுத்து முதல் பாடலை எழுதுகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி,மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் பற்றி இயக்குனர்கள் தெரிவித்தபோது, இப்படத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Leave a Response