பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

இன்று இங்கிலாந்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.முதலில் களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர்கள் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தனர்,தவான் 1 ரன்னிலும்,ரோஹித் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.கோலி 47 ரன்கள் எடுத்தார்,அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல், தோனி அபாரமாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.ஆட்டநேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் ஓரளவுக்கு சிறப்பான தொடக்கம் தந்தனர்,பிறகு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்,இதனால் பொறுமையாக விளையாடி லிட்டன் தாஸ் (73 ரன்கள் ),ரஹீம் (90 ரன்கள் )அணியை சரிவிலிருந்து மீட்டனர்,இந்த இணையை சாஹல் பிரித்தார்,பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது, முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Leave a Response