இந்தியா முழுவதும் மோடி அலை – ரஜினி

 

இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பற்றியும் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர்,

இந்தியா முழுவதும் மோடி அவர்களுக்கு ஆதரவு அலைகள் வீசுகிறது,ஆனால் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியை தழுவியுள்ளது.இதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் மீத்தேன்,ஹைடிரோகார்பன்,நீட் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதால் தான்.

தற்போது இந்தியாவில் மோடி அவர்கள் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்குகிறார்,ராகுல் காந்தி பதவி விலக முன்வந்திருப்பது அவரது இயலாமை அல்ல காங்கிரஸ் போன்ற பழமையான கட்சியில் மூத்த தலைவர்களை கையாள்வது மிகவும் கடுமையான பணி.தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது தொடர்ந்து அரசியலில் பணியாற்ற வேண்டும்.

கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் நிதின் கட்கரி கூறி இருப்பதை வரவேற்கிறேன்.மேலும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.

 

 

 

Leave a Response