அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாகக் கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது . உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருக்கும் மற்ற நீதிபதிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்குள் தீர்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டது. எனினும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம்,

ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புவதை மறுக்க முடியாது.அதே இடத்தை இஸ்லாமியரும் தங்களுக்கு சொந்தம் என்று கூறுகிறார்கள்.மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எனவே எல்லா மதத்தினையும் மதிக்க வேண்டும். மசூதியின் அடிப்படை கட்டடம் இஸ்லாம் முறைப்படி கட்டவில்லை எனவும், பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க தங்களுடையது என முஸ்லிம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை.பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு எனவும், அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து. அயோத்தியில் இஸ்லாமியருக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு. . நிர்மோகி அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மூன்று மாத காலத்திற்குள்ளாக கோயில் கட்டும் அமைப்பை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

Leave a Response