அஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘

நடிகர் அஜித்குமார் அவர்களின் 60 வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த கூட்டணியே நேர்கொண்டபார்வை படத்தில் தொடங்கியது.இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நேற்று தொடங்கியது.இதில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் , ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்குமாரின் இந்த படத்திற்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர் .பெயர் அறிவித்த சில நிமிடங்களிலேயே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.ட்விட்டரில் வலிமை டிரெண்டிங் ஆனது. படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் .

Leave a Response