தீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’

ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ‘பிகில்’.இப்படத்தில் இளையதளபதி விஜய்,நயன்தாரா நடித்து அட்லீ இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் கதிர், யோகிபாபு,விவேக் என்று ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவரும் படம்’கைதி’. இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.இந்த படமும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

இரண்டு பெரிய ஹீரோக்கள் மற்றும் இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் படம் என்பதால் இரு படங்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு படங்களும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.அக்டோபர் 25 ந் தேதியே இரண்டு படங்களும் ரிலீஸாகிறது.

Leave a Response