“சோழ நாட்டான்” படத்தில் விமலுடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகை

ஹரிஷ் பிலிம் புரொடக்க்ஷன் சார்பாக பாரிவள்ளல் தயாரிப்பில்,பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா எழுதி இயக்கும் படம் “சோழ நாட்டான்”. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க, பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்” இப்படத்தில் இணைந்துள்ளார்.

கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக ‘பங்கரி பலராஜு’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து தெலுங்கில் “எஸ் டி” “இட்லு மீ ஸ்ரீமதி” போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது, கதை ரொம்ப நல்லா இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.பிரகாஷ் ஒளிப்பதிவும், பாடல்களை கலைக்குமார் மற்றும் மணி அமுதவன், சபரீஷ் ஆகியோரும் எழுதியுள்ளனர்.

Leave a Response