ராகுல் ராஜினாமா – ஏற்க மறுப்பு

நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்ற ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,ஆனால் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.மாறாக உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது உங்களால்தான் இந்த நிலையை மாற்ற முடியும்,மேலும் கட்சிக்காக நீங்கள் எடுக்கும் எல்லா முடிவிற்கும் எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்தனர்.

ப.சிதம்பரம் பேசுகையில் உங்களை தென்னிந்தியர்கள் மிகவும் நேசிக்கிறார்கள்,நீங்கள் இப்படி செய்தால் தாங்கிக்கொள்ளமாட்டார்கள் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ராகுல் இனி கட்சியை பலப்படுத்த சில அதிரடி முடிவுகளை எடுப்பார் என்று தெரிகிறது.

Leave a Response