சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”

நடிகர் ராம் சரண் தயாரிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான படம் “சைரா நரசிம்ம ரெட்டி”. பருச்சூரி சகோதரர்கள் இப்படத்தினை எழுதியுள்ளார்கள். அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜீவன் கலை இயக்கம் செய்து காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும்
நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது.

பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது. இவ்விழாவில்

நடிகை நாயகி தமன்னா பேசியபோது,

வீட்ல என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தாலும் குடும்பம் முழுதும் அங்கு இருக்க வேண்டும் இன்று நான் சினிமா கற்றுக்கொண்ட நிறைய ஆளுமைகள் இங்கு இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய படத்தில் நான் இருப்பதே பெருமைதான். நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே இருந்தது. சுரேந்தர் ரெட்டி சார் படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். இது இந்தியா முழுமைக்கும் உள்ள ரசிகர்களுக்கான படம். பாகுபலிக்கு பிறகு மிகப்பெரிய படமாக இந்தப்படம் கிடைத்திருக்கிறது. சிரஞ்சீவி சாருடன் முதல்முறை நடித்தபோது டயலாக்கை மறந்தவிடக்கூடாது என பெரும் பதற்றம் இருந்தது. அவருடன் நடித்தது நம்பமுடியாத அதிர்ஷ்டம். நயன்தாராவுடன் நடித்ததும் மிகப்பிடித்த, மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் பங்குபெறும் வாய்ப்பு தந்ததற்கு ராம்சரணுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியபோது,

இந்தப்படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். 96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம். நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம். தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். சினிமாவின் மேஜிக் அதுதான் இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள் ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார் அப்போதிலிருந்து உருவான படம் இது. கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி. 10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார். கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி இந்த வாரம் படம் வருகிறது.எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள் கொண்டாடுங்கள் என்றார்.

சிரஞ்சீவி பேசியபோது,

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு. பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின் சினிமா வந்த பிறகு தமிழில் வந்த “கத்தி” படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார். நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது.தமிழில் கேட்டுக் கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி. இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.

Leave a Response