‘நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம் 3.5/5

.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

சிறுவயதிலேயே தந்தையை இழந்து அம்மா தங்கையுடன் கிராமத்து இளைஞனாக இருக்கும் சிவகார்த்திகேயன், எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார் ,அவருக்கு உறுதுணையாக அவரது தங்கை மற்றும் அம்மா உள்ளனர்.ஹீரோவிற்கு தாத்தாவாக வரும் பாரதிராஜா தனது நடிப்பில் முதிர்ச்சியை நினைவுபடுத்துகிறார்.சில இடங்களில் இவர் பேசும் வசனங்கள் நிறைவை தருகிறது .அம்மாவாக வரும் அர்ச்சனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பெரியப்பா பையனான சூரி எப்போதும் உடனே வருகிறார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஊரில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்கடையை சட்டத்தின் மூலமாக அகற்றிவிடுகின்றனர்.மேலும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மற்றும் திட்டத்தை முறியடிக்கிறார்கள். இதனால் மதுபானக்கடை உரிமையாளர் நரேனின் பகைக்கு ஆளாகிறார்.இதனால் வரும் பிரச்சனைகளை சமாளித்து வெளிவருகிறார்.பெரிய சொந்தங்கள் இருந்தும் சில காரணங்களால் அவர்களின் மூலம் ஒதுக்கப்படுகிறார் ஹீரோ.

தனது முறைப்பெண்ணை காதலிக்கும் சிவகார்த்திகேயன் தங்கை ஐஸ்வர்யா மூலம் ஹீரோயினுக்கு தெரியப்படுத்துகிறார் .ஹீரோயினாக வரும் அனு இமானுவேலுக்கு அந்த அளவுக்கு காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த இடத்தை நிரப்பியுள்ளார்.ஐஸ்வர்யா எப்போதும் போல் யதார்த்தமான கிராமத்து பெண்ணாக வலம் வருகிறார்.செண்டிமெண்ட் காட்சிகளில் அண்ணன் தங்கை போட்டிபோட்டு நடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை பழி வாங்குவதற்காக அவரது தங்கை ஐஸ்வர்யாவை நடராஜ் திருமணம் செய்கிறார்.நடராஜ் சிவகார்த்திகேயனை பழிவாங்கினாரா,ஹீரோயினுடன் காதலில் வெற்றிபெற்றாரா ,சொந்த பந்தங்களுடன் ஒன்று சேர்ந்தாரா என்பது தான் மீதி கதை.படத்தின் இறுதியில் அப்பா இல்லாத வருத்தத்தை ஏக்கத்துடன் சொல்லி நெகிழ வைக்கிறார் சிவகார்த்திகேயனின்.

சிவகார்த்திகேயன் சூரி எப்போதும் போல் காமெடியில் கலக்கியுள்ளார்.சூரியின் மகனாக வரும் பாண்டிராஜ் அவர்களின் மகன் காமெடி காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.கிராமத்து அழகை அழகாக படம் பிடித்துள்ளார்.இமான் அவர்களின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது.
மேலும் படத்தில் சமுத்திரக்கனி ,சுரேஷ்,வேலராமமூர்த்தி,சுப்பு பஞ்சு,சண்முகபாண்டியன், அருந்ததி, ரமா, மைனா போன்ற பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளனர்.

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு அடுத்து இப்படத்தை இயக்கியுள்ள பாண்டிராஜ் அவர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம்.செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.படத்தில் சில குறைகள் இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு திரைப்படம்.

Leave a Response