‘நடிகவேள் செல்வி’ பட்டம் பெற்ற ராதிகா சரத்குமார்

“மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்களுக்கு ‘நடிகவேள் செல்வி’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சரத்குமார், இயக்குநர் சரண், ஆர் கே செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.

ராதிகா சரத்குமார் பேசியபோது,

என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடிவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது. அது தான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

சரத்குமார் பேசியபோது,

ராதிகாவை கௌரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 41 வருடம் சினிமாவில் இருக்கிறார் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர் தான் லேடி சூப்பர்ஸ்டார். அவருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஶ்ரீக்கு தகுதியானவர் அவர். இந்தப்படக்குழு அவரை கௌரவித்ததிற்கு நன்றி. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தை தியேட்டரில் ரசியுங்கள். மார்க்கெட் ராஜா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நாசர் அவர்கள் பேசியபோது,

இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகவேள் செல்வி எனும் பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர். சரத்குமார் சொன்னது போல் அவர் இன்னும் பல உயரங்களுக்கு தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப்படத்தில் சிலை நன்றாக நடித்திருகிறது என்கிற பெயரைப் பெற்றித் தருவார் ராதிகா. அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

Leave a Response