பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி

உலககோப்பைக்கு கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதியது,இதில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது ,இந்திய அணியில் ஜடேஜா மட்டும் 54 ரன்கள் எடுத்தார்,மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்பு 180 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி 37.1 ஓவர்களில் 180 எடுத்தனர்.அந்த அணியில் ரோஸ் டெயிலர் 71 ரன்களும்,வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

Leave a Response