செப்டம்பர் 12 -ல் ரிலீசாகும் கிச்சா சுதீப்பின் “பயில்வான்”

ஆர்.ஆர்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 12 ல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.நடிகர் கிச்சா சுதீப் இப்படத்தில் நடித்துள்ளார்.ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தை பற்றி கிச்சா சுதீப் கூறியபோது,

“பயில்வான்” படத்தில் நடித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். கதாப்பாத்திரத்திற்காக ஒரு ஒழுங்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்தது எனக்கு மிகவும் கஷ்டம் வாயந்ததாக இருந்தது. இப்படத்தின் கதையை முதன் முதலில் கிருஷ்ணா கூறியபோது நான் அதன் மீது விருப்பமற்றே இருந்தேன். ஏனெனில் அந்த நேரத்தில் ஜிம்மையே நினைத்துப் பார்க்காத ஒருவனாக நான் இருந்தேன். மற்ற நடிகர்கள் போல் நான் ஒன்றும் ஃபிட்னெஸ் ஃப்ரீக் கிடையாது. உடற்கட்டுக்காக மெனக்கெடும் இப்படத்தின் பாத்திரத்தை ஏற்பது எத்தனை கடினம் என்பது எனக்குத் தெரியும். எனது உடல் எப்போதும் ஒல்லியான தன்மையுடன் இருந்ததற்கு எனது ஜீனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏன் நாம் இந்த கதாப்பாத்திரத்தை ஒரு சவலாக ஏற்கக்கூடாது என முடிவு செய்தேன். கிருஷ்ணாவின் திரைக்கதை மிக அழுத்தமிக்கதாகவும் உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது. இந்தக் கதாப்பாத்திரத்திற்காக உடற்பயிற்சி கூடத்திலேயே தவம் இருந்தேன். உடலை ஃபிட்டாக்குவது மட்டுமன்றி இந்தக்காதாப்பாத்திரம் நிறைய தியாகங்களை கோரியது. முடிவில் இது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக மாறியது.

இப்படத்தின் 20 முதல் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் இருந்து விலகி விட நினைத்தேன். படத்தின் பாக்ஸிங் காட்சிகள் எனக்கு நிறைய காயங்களையும், அயர்ச்சியையும் தந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் எப்போது வீட்டுக்கு செல்வோம் எனக் கேட்கும். ஆனால் இயக்குநர் கிருஷ்ணா என் மீது வைத்த அபார நம்பிக்கையும், படக்குழு தந்த உந்துதலும் என்னை உற்சாகப்படுத்தியது. உடலை கட்டுக்குள் வைத்திருப்பது முடிகொட்டும் பிரச்சனை , மனமாற்றங்கள், டிப்ரெஷன் என பலவித துன்பங்களை கொண்டு வந்தது. ஆனால் இப்போது படத்தை முழுதாய் பார்க்கும்போது அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் வெறும் தூசாக தெரிகிறது. படம் அத்தனை மகிழ்ச்சியை தந்திருக்கிறது. என்றார்

சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. இப்படத்தில் ஆகண்ஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

ராம் லக்‌ஷ்மண், டாக்டர் ரவி வர்மா , லார்னல் ஸ்டோவெல் ஆகியோர் பாக்ஸிங் காட்சிகளையும் A விஜய் குஸ்தி காட்சிகளையும் அமைத்துள்ளனர்.

Leave a Response