தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகர் கவுண்டமணி

சமீப காலமாக தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரபலங்களை பற்றியும் அவர்கள் கூறிய வசனங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் மரியாதை குறைவாக சித்தரிக்கப்படுகிறது. சில எதிர்ப்புகளுக்கு பிறகு அவை நீக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

தற்போது திரு. கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்ஸர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரு.தினேஷ் கண்ணன் மற்றும் திரு.ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Leave a Response